கொரோனா நடவடிக்கையால் மனஉளைச்சல்- போன் மூலம் மனநல ஆலோசனை!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாள்தோறும் வெளியில் சென்று வேலை செய்த ஆண்களுக்கும் சரி, வெளியில் இருந்துகொண்டு மருத்துவர்களாகவும் காவல்துறை அதிகாரிகளாகவும் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சரி மன உளைச்சல் என்பது தற்போது அதிக அளவில் ஏற்படுகிறது.
எனவே புதுக்கோட்டையில் இதற்கான ஒரு சிறந்த செயல்பாடு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதாவது மன அழுத்தம் ஏற்படுபவர்களுக்கு தொலைபேசி வழியாக நல்ல மன நல ஆலோசனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த இரு 94860 67686, 94941 21297 எண்களில் தேவைக்கேற்ப ஆலோசகர்கள் ஆலோசனை கூறுவார்கள். தமிழக அரசின் அனுமதியோடு மார்ச் 26ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை தடுப்புப் நடவடிக்கையில் உள்ளவர்கள் என அனைவருக்குமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும், இது குறித்து கூறும் அந்த திட்டத்தின் அலுவலர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம் அவர்கள் கஜா புயலில் சிக்கியவர்களுக்கு கொடுக்கப்பட்ட மனநல ஆலோசனை நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இந்த திட்டமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டம் முதலில் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.