கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் இருந்த மீனவர் உயிரிழப்பு.!
கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66 .இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பியுள்ளார்.
இதனால் கொரோனா அச்சம் காரணமாக இவர் வீட்டில் தனிபடுத்தப்பட்டிருந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் இன்று திடீரென உயிரிழந்தார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை.இவரது மகன் சவூதி அரேபியாவில் பணியாற்றி கடந்த 13-ம் தேதி ஊருக்கு திரும்பிய நிலையில் அவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.