கொரோனோ தொற்று எதிரொளி… சிறையில் உள்ள கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க வீடியோ கால் மூலம் குடும்பத்துடன் பேச புதிய வசதி…

Default Image

கோரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது கூட்டமாகவோ  சந்திப்புக்கு  தமிழக அரசு தடை விதித்துள்ளதால் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள   கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக செல்போன் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேச அனுமதி அளித்து சிறைத் துறை டிஜிபி சுனில்குமார் சிங் தற்போது உத்தரவிட்டுள்ளார்.

  • இதன்படி கோவை, புழல்-2 ஆகிய மத்திய சிறைகளுக்கு தலா 8 செல்போன்கள்,
  • திருச்சி, மதுரை மத்திய சிறைகளுக்கு தலா 6 செல்போன்கள்,
  • புழல்-1, பாளையங்கோட்டை, கடலூர், வேலூர், சேலம் ஆகிய மத்திய சிறைகளுக்கு தலா 5 செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • இதேபோல புழல், வேலூர், திருச்சி, கோவை, மதுரையிலுள்ள பெண்கள் தனிச் சிறைகளுக்கு தலா ஒரு செல்போன் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தற்போது சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேசி வருகின்றனர். இந்த வசதியில் கைதிகள் ஏற்கெனவே அளித்துள்ள எண்களுக்கு மட்டுமே பேச முடியும். புதிதாக சிறைக்கு வந்துள்ள கைதிகள் மற்றும் ஏற்கெனவே செல்போன் எண்களை அளிக்காத நபர்கள் ஆகியோர் தற்போது தங்களது குடும்பத்தினர் 3 பேரின் எண்கள் வரை பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதியின் மூலம்  கைதிகள் குறைந்த பட்சம் 5 முதல் 7 நிமிடங்கள் வரை மட்டுமே பேசலாம். இந்த வசதிக்கு  எவ்வித கட்டணமும் இல்லை. எந்த கைதி  எந்த எண்ணில், யாருடன், எவ்வளவு நேரம் பேசியுள்ளார் என்ற  பதிவேடு பராமரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்