தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதி!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 700க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 29ஆக இருந்து வந்த நிலையில், இன்று காலை மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அப்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதது.
இதனை அடுத்து தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 73 வயதான ஒரு மூதாட்டிக்கும், சென்னை அண்ணா நகரை சேந்த 38 வயதுடைய ஒரு நபருக்கும், சேலத்தை சேர்ந்த ஒரு மூதாட்டிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இன்று ஒரு நாளில் 9 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025