4 நாள்களாக ரூ.300 கோடி இழப்பு .! அடுத்தமாதம் இழப்பு அதிகமாக இருக்கும்-அமைச்சர் தங்கமணி.!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு 21 நாள்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து அமைச்சர் தங்கமணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது ஏப்ரல் 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் மின்சார கட்டணம் செலுத்தலாம். ஆன்லைன் மூலம்  கட்ட முடியவில்லை என்றாலும்  ஏப்ரல் 14-ம் தேதி வரை மின்துண்டிப்பு இருக்காது என அமைச்சர் தங்கமணி கூறினார்.

சமீபத்தில் திருவண்ணாமலையில் தெரியாமல் மின்துண்டிப்பு நடந்துவிட்டது உடனடியாக எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் அங்கு பேசி அங்கு மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் மின்துண்டிப்பு இருக்காது என கூறியுள்ளோம்.

மேலும் மத்தியில் இருந்து வரும் மின்சாரம் வந்துகொண்டு இருக்கிறது. தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் 4 ஆயிரம் மெகாவாட் மின் தேவை குறைந்துள்ளது.

தொழிற்சாலைகள் கடந்த 4 நாள்களாக இயங்கததால் மின்சாரத்துறைக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தமாதம் இழப்பு அதிகமாக இருக்கும் காரணம் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கததால் வருமானம் குறையும் என கூறினார்.

மின்சாரம் தேவை குறைந்ததால் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் 80% மின்சார பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மின்தடை ஏற்பட்டால் அதை சரிசெய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.இதனால் ஏப்ரல் 14-ம் தேதி வரை தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

 

author avatar
murugan