நீட் தேர்வு ஒத்திவைப்பு – மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு, அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2ம் தேதி தொடங்கிய விண்ணப்பத் தேதி, ஜனவரி 1ம் தேதி வரை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025