கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி ஒதுக்கிய திமுக எம்.பி
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.
பின் கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கழகத்தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலோடு,
தஞ்சை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (MPLADS) ரூபாய்.5 கோடி ஒதுக்கியுள்ளேன்.@mkstalin pic.twitter.com/DjPj2beq7g— S.S.Palanimanickam M.P (@SSP_MANICKAM) March 26, 2020
இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதி திமுக எம்.பி. பழனிமாணிக்கம் தஞ்சை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (MPLADS) ரூபாய்.5 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.