மகாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை ரூ.51 கோடி நிதியுதவி
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை அமைப்பு ரூ.51 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . மேலும் கொரோனாவால் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . மகாராஷ்டிராவில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது.வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக அதனை எதிர்கொள்ள, மகாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை அமைப்பு ரூ.51 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.