பழனி முருகன் கோவில் பங்குனி மாத திருவிழா ரத்து! வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் பெரும்பாலான முக்கிய கோவில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பழனி முருகன் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் பங்குனி மாத திருவிழா இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.