இந்திய சமையல் கலை வல்லுநர் கொரோனாவால் அமெரிக்காவில் மரணம்!

Default Image

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 24 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 5 லட்சத்திற்கும்  அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பலவேறு நாடுகளில் மக்கள் வீதியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவை சேர்ந்த சமையல் கலை வல்லுநர் கார்டோஸ் என்பவர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு மும்பையில் சொந்தமாக ஹோட்டல் ஒன்று உள்ளது. இவர் இந்த மாதம் 8 ஆம் தேதி மும்பை வந்து சென்றுள்ளார். அடுத்து 18ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதனால், கடந்த 8ஆம் தேதி இவர் மும்பை வந்திறங்கி சந்தித்த நபர்களுக்கு இவர் இறந்த செய்தியை அவரது மும்பை ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கார்டோஸை சந்தித்த நபர்கள் மருத்துவ பரிசோதனை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இவருக்கு மனைவி, மற்றும் 2 மகன்கள் உள்ளார்.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்