LIVE:ரெப்போ விகிதம் 4.4% ஆக குறைப்பு : ரிசர்வ் வங்கி.!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்து வருகிறார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் ரிசர்வ் வங்கி தரப்பில் சலுகைகள் அறிவிப்பு.
- வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 5.15%ல் இருந்து 4.4% ஆக குறைப்பு என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
- ரிவர்ஸ் ரெப்போ 90 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4% ஆக நிர்ணயம். ரிவர்ஸ் ரெப்போ 4.9% ல் இருந்து 4% ஆக குறைப்பு.
- வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீட்டுக்கடன் , வாகனங்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது. வீட்டுக்கடன் மட்டுமின்றி தொழித்துறையினர் பெற்ற கடன்கள் மீதான வட்டியும் குறைய வாய்ப்புள்ளது.
-
கொரோனா எதிரொலியாக சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படக்கூடும். வங்கிகளில் கடன் வாங்கியோர் 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ கட்ட தேவையில்லை. கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் அளித்துள்ளது ரிசர்வ் வங்கி.