இந்தியாவில் 724 பேருக்கு கொரோனா.! உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்வு.!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவால் உலகளவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,32,262 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழப்பின் எண்ணிக்கை 24,089 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,24,332 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்து, பலி எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து 66 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக கேரளா 137, மகாராஷ்டிரா 131, கர்நாடகா 55, தெலுங்கானா 45, குஜராத் 43, ராஜஸ்தான் 41, உத்தரப்பிரதேசம் 41, டெல்லி 36, பஞ்சாப் 33, ஹரியானா 30, தமிழ்நாடு 29 என 724 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. மேலும் மகாராஷ்டிரா 4, குஜராத் 3, கர்நாடகா 2, பீகார், டெல்லி, இமாச்சல பிரதேஷ், ஜம்மு, மத்தியபிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்து, மொத்தம் 17 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.