கொரோனா தங்களை நெருங்காமல் இருக்க சிவகங்கை மாவட்ட கிராம மக்கள் செய்த அதிரடியான செயல்!
இந்தியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பாப்பா ஊரணியை சேர்ந்த காட்டு நாயக்கர் சமூகத்தினர், இப்பகுதியில் 300 குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள், 25 மூலிகை கொண்ட கஷாயத்தை காய்ச்சி வழங்கி வருகின்றனர்.
ஆடாதோடை, அக்ரகாரம், கற்பூரவள்ளி, திப்பிலி, சிந்திலி, கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, கோஸ்டம், நிலவேம்பு, கடுக்காய்தூள், இலவங்கம், முள்ளி, வட்டத்திருப்பி, சுக்கு, சிறுகாஞ்சொறி, தூதுவளை, வேம்புபட்டை, வேப்பஇலை, காம்பு, பூண்டு, சீரகம், மிளகு உள்ளிட்ட 25 மூலிகைகளை காய்ச்சி தாங்கள் பருகுவதுடன் அருகில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கும் தினமும், காலை மாலையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இந்த கஷாயத்தை குடிப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக கூறுகின்றனர். மேலும், இவர்கள் வெளியில் இருந்து வரும் எந்த நபராயும் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. தங்கள் வீட்டு வாசலில் வேப்பிலையை வைத்து, தினமும் மஞ்சள் தண்ணீர் தெளித்து வருகின்றனர்.