கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூட்டம் கூடுவதை தவிர்க்க நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை…

Default Image

இந்தியாவில் கொடிய கோரோனோவின் பிடியில் சிக்கி இதுவரை  15 பேர் பலியாகி உள்ளனர்.  653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்,  42 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருபவர்கள் 26பேர். இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள், தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியவசிய பொருள்களை மட்டும் மக்கள் பயன்படுத்தும் பொருட்டு ஒரு சில கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதில், அத்தியவசிய பொருளான பாலும் ஒன்று,  இந்நிலையில், இது தொடர்பாக பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கங்கள் வெளியிட்ட அறிக்கையில் : தமிழகத்தில் நாளை அதிகாலை 3.30மணிக்கு தொடங்கும் பால் விற்பனை காலை 9 மணிக்கு முடிவடையும் என தற்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள்  காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பால் முகவர்கள் கடைகளில் பால் விற்பனை நேரம் குறைக்கப்படும் என்றும்,  சில்லரை விற்பனை கடைகளுக்கு பால் விநியோகம் செய்யப்படாது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet
Jitesh Sharma