பிலிப்பைன்ஸ் நாட்டில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள்… மீட்க இந்திய அரசிற்க்கு கோரிக்கை…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 144 தடைஉத்தரவு பிறப்ப்பித்துள்ளது. இதேபோல், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம் பயணிகள் வர மத்திய அரசு தற்போது தடை விதித்தது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயர் கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது பிலிப்பைன்ஸில் கொரோனா தாக்கம் அதிகளவில் உள்ளதால், இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக பிலிப்பைன்ஸில் இருந்து இந்தியா புறப்பட்ட நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் மணிலா விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விமான நிலையத்திலேயே முடங்கி கிடப்பதாகவும், தங்களை தாயகம் மீட்டுச் செல்ல இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.