ஊழியர்களுக்கு கொரோனா.! மன்னர் – ராணி தனிமைபடுத்தல்.!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றுவரை உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது.
இந்த வைரசால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக பாதிக்கப்பட்ட இத்தாலி ,ஸ்பெயின் மற்றும் ஈரான் உள்ளது. இதையெடுத்து மலேசியாவில் நேற்று மட்டும் 235 பேர் பாதிக்கப்பட்டனர். 3 பேர் இறந்துள்ளனர்.
இதனால் அந்நாட்டில் நேற்று 2,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மலேசிய அரண்மனையைச் சேர்ந்த 7 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து மலேசிய மன்னர் கிங் சுல்தான் அப்துல்லா மற்றும் மலேசிய ராணி துன்கு அஜிசா அமினா மைமுனாவுக்கு கொரோனா இருக்கிறதா ..? என மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதில் மன்னர் மற்றும் ராணிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
இருப்பினும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.