#LIVE : விழித்திரு.. விலகி இரு … வீட்டில் இரு.. மக்களுக்கு முதலமைச்சர் உரை.!

Default Image
  • தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்.
  • அம்மா உணவகங்கள் மூலம் தரமான சுகாதாரமான உணவு வழங்கப்படும்.
  • அரிசி, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு.
  • 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு.
  • கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் .
  • அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
  • அத்தியாவசிய பொருட்களுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
  • கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் .
  • சாதி ,மத ,இன வேறுபாடுகளை கடந்து கொரோனாவை விரட்ட உறுதியேற்போம்.
  • பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம்
  • ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி
  • கொரோனாவிற்கு எதிராக போராடி தமிழகத்தையும் , தமிழ்மக்களையும் காக்க உறுதியேற்போம்.
  • கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றாக இந்த 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.
  • கொரோனா வைரஸானது நேரடியாக கைகள், தும்மல், இருமல் மூலம் பரவுகிறது. 
  • தமிழகம்  முழுவதும் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
  • தமிழகம் முழுவதும் 10,518 படுக்கையறைகள் இதற்காக மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன. 
  • 3,850 கோடி நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • நோயின் தீவிரத்தை அறிந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்