ஊரடங்கை உதறி பைக்கில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்-மதுரையில் பரபரப்பு

Default Image

உலகம் முழுவதும் தனது தொற்றால் கொன்று குடித்து வரும் கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் இந்தரஸால் முதல் உயிர் பறிபோகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு  ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.அதே போல் தமிழக முதல்வர் பழனிச்சாமியும் தமிழகம் முழுவதும் நேற்று மாலை6 மணி முதல் 144 தடை உத்தரவினை பிறப்பித்தார்.இந்நிலையில் சென்னை காவல் ஆணையரும் தடை உத்தரவினை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார்.இந்நிலையில் இந்தியாவில் மட்டும் இந்த வைரஸ்க்கு 10 பேர் பலி ஆகியுள்ள நிலையில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிலும் இந்த வைரஸிற்கு தமிழகத்தில் முதலில் உயிரிழந்தவர் மதுரைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.55வயது நிறைந்த அவருக்கு கொரோனாதொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்தார்.இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட எல்லைகள் அனைத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.தற்போது மதுரையில் பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கை மீறி பைக்கில் சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு  தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு கடும் எச்சரிக்கையோடு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்