BREAKING: கொரோனா தடுப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை.!
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நேற்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.மேலும், இந்த 21 நாட்கள் ஊரடங்கில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த கூட்டத்தில் டிஜிபி, தலைமைச் செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினருடன் முதலமைச்சர் தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.