இது ஒன்றே நாம் இந்த அபாயம் கடக்க ஒரே வழி! முயல்வோம்! முடியும் நம்மால் – இயக்குனர் சேரன்

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக தீவிரமாக இருப்பதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அனைவரின் கவனத்திற்கும்.. எந்த நிலையிலும் பதட்டம் வேண்டாம்.. அரசு மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. ஒத்துழைப்பது மட்டுமே நமது கடமை.. வீட்டில் அன்பாக அமைதியாக பொழுதை கழியுங்கள்.. இது ஒன்றே நாம் இந்த அபாயம் கடக்க ஒரே வழி.. முயல்வோம்.. முடியும் நம்மால்.’ என பதிவிட்டுள்ளார்.