21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு ! தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்கள் மூடல்
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நேற்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.மேலும், இந்த 21 நாட்கள் ஊரடங்கில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மறுஉத்தரவு வரும் வரை சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற பணிகள் அனைத்தும் நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.