பருவ நிலை மாநாட்டில் உலக தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட கிரேட்டா துன்பெர்க்கிற்கு கொரொனா அறிகுறி…

Default Image
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம்  தேதி நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த மாநாடுட்டில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா துன்பெர்க் என்ற 17 வயது சிறுமி பருவநிலை மாற்ற ஆர்வலராக  பங்கேற்றார். 

அந்த மாநாட்டில் பேசிய  துன்பெர்க் உலகநாட்டு தலைவர்களை நோக்கி “பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றியே  பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?” என ஆக்ரோஷமாக அனைத்து தலைவர்கள் முன்னிலையிலும்  முழங்கினார். அந்த மாநாட்டிற்கு பின் கிரேட்டா துன்பெர்க் உலக அளவில் அனைவராலும் பேசப்படும் நபராக உருவெடுத்தார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்றாளவிற்க்கு பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிரேட்டா தனது தந்தையுடன் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து சொந்த நாடான சுவீடன் திரும்பிய கிரேட்டா மற்றும் அவரது தந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் வீட்டில் தங்களை தாங்களேகவே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இது குறித்து கிரேட்டா தன்பெர்க் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள செய்தியில், கடந்த 10 நாட்களாக தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு உடல் நடுக்கம், இருமல், தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் கடந்த சில நாட்களாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  வைரஸ் அறிகுறிகள் இருந்தாலும் தான் இன்னும் கொரோனா பரிசோதனை செய்யவில்லை என தன்பெர்க் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்