சென்னையில் இருந்து மதுரை செல்ல பேருந்து கிடைக்கவில்லை! பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களுக்கு ஏற்படாமல் இருப்பதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே தடுப்புக்கட்டை அருகே, சென்னையிலிருந்து மதுரை செல்ல பேருந்து கிடைக்காமல் பைக்கில் சென்ற உதவி இயக்குநர் விபத்தில் உயரிழந்துள்ளார். மேலும், கரூர் அருகே பைக்கில் சென்ற 2 பேர் லாரி மோதி உயிரிழந்துள்ளனர்.