திருச்சி, மதுரைக்கு இயக்கப்படும் பேருந்து சேவைகள் நிறுத்தம்

Default Image

சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.  

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளான மருந்து, காய்கறி, பால், மளிகை போன்ற கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடப்படும் என்றும் இந்த தடை நாட்களில் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி இயங்காது என்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களின் எல்லைகளையும் மூடவும் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் நீண்ட தூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்