#Breaking: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு.!
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில், தற்போது 69 வயதான முதியவர் இமாச்சல பிரதேசத்தில் தாண்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மார்ச் 15 அன்று அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய இவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் 468 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 34 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.