இந்தியாவில் கொரோனா பாதிப்பு 433 ஆக அதிகரிப்பு.! எந்தந்த மாநிலத்தில் எவ்வளவு தெரியுமா.!
இந்தியாவில் கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 415 ஆக இருந்த நிலையில், தற்போது 433 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 23 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனவால் இந்தியாவில் இதுவரை 7 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்து 8 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 74, கேரளாவில் 67, கர்நாடகா 33, தெலுங்கானா 32, உத்தரபிரதேசம் 31, டெல்லி, குஜராத் 29, ராஜஸ்தான் 28, ஹரியானா 26, பஞ்சாப் 21, தமிழநாடு 7, ஆந்திரா 7, மேற்கு வங்கம் 7, சண்டிகர் 6, மத்தியப் பிரதேசம் 6 போன்ற மாநிலங்களில் அதிகபட்சமாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, பீகார், கர்நாடகா, குஜராத், பஞ்சாப், கொல்கத்தாவில் தலா ஒருவரும், மகாராஷ்டிராவில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.