தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு – சென்னை மாநகராட்சி
சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. மாநகராட்சியின் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஆர்வமுள்ள தனி நபர்களும் பங்கேற்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 வீடுகள் உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் என்று கூறப்படுகிறது. இனிமேல் தொற்று அறிகுறி அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளின் கதவில் உள்ளே நுழையாதே என்ற நோட்டீஸ் ஒட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.