நாங்கள் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுகிறோம்.. கனடா அதிரடி!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல நாடுகளில் பல போட்டிகளை ரத்து செய்தனர். இந்நிலையில், ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யுமாறு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கோரிக்கையை முன்வைத்திருந்தது.
இந்நிலையில், கனடாவில் நாளுக்குநாள் கொரோன பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால், வீரர்களின் பாதுகாப்பு கருதி, ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக கனடா ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது.