காஞ்சிபுரம் மாவட்டத்தில் 71 பேர் தனிமைப்படுத்தல் .!
முதலில் சீனாவில் கோரத்தாண்டவம் ஆடி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா, தற்போது மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோயால் 400-க்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழகத்திலும், சென்னை, காஞ்சிபுரம், கோவை ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில், 71 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக, இவர்கள் தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 71 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.