+1.,+2க்கு.,பொதுத்தேர்வு தேவையா!??விபரீத விளையாட்டு..பாதுகாப்பில் அதிமுக அரசு அலட்சியம்-விமர்சனம்
மாணவர்களின் பாதுகாப்போடு விபரீத விளையாட்டு நடத்தாமல், 11 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பிற்கும் மார்ச்.,31 வரை விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் 10வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதே போல் மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்தபடி நடைபெறும் என்று தமிழக அரசு தற்போது கூறியுள்ளது.இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா?மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்.”என்று தனது ட்விட்டர் பதிவில் கூறி உள்ளார்.
11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து #CoronaVirus அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா?
மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் pic.twitter.com/6gfCT38dP0
— M.K.Stalin (@mkstalin) March 22, 2020