ரயில்கள் ரத்து… சென்னையில் காத்திருந்த பயணிகள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு… மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேரில் ஆய்வு…
பாரத பிரதமரின் அழைப்பை ஏற்று நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வெளிமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் பல்வேறு வெளிமாநிலத்தவர்கள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட 75 மாவட்டங்களை முடக்குவதாக மத்திய அரசு நேற்று மாலை திடீரென்று ஒரு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதன்படி வரும் மார்ச் 31-ம் தேதி வரை சென்னையில் இருந்து எந்த ரயிலும் புறப்படாது. எந்த ரயிலும் சென்னைக்கு வராது என்ற நிலை ஏற்பட்டுள்ள .எனவே, அங்கு ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் அனைவரும் நிவாரண மையங்களுக்கு அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார்.இதற்கிடையே, மேலும் 8 ரயில்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எனவே, அதில் வரும் பயணிகளும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட உள்ளனர்.