உலகளவில் 2,66, 073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 11,184 பேர் உயிரிழந்துள்ளனர்.!
சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி உலக முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் நேற்று வரை கொரோனா வைரசால் 81,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,261 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து சற்று இயல்பு நிலை திரும்பியுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இத்தாலியை கொன்று குவிக்கும் கொரோனா வைரஸ் அங்கு வேகமாக பரவி சீனாவை மிஞ்சியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் கொரோனவால் கடந்த 24 மணிநேரத்தில் 5,986 பேர் பாதிக்கப்பட்டு, 625 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 53,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,657 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் உலக முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை உலகளவில் 2,66073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் புதிதாக 32,000 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 11,184 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கடைசி 24 மணி நேரத்தில் 1344 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.