BREAKING:தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி.!

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஏற்கனவே 3 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று பேரில்  இருவர் தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள் , ஒருவர்  நியூஸிலாந்திலிருந்து வந்தார் என தெரிவித்தார். இதனால்  தமிழகத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  6ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298 ஆக அதிகரித்துள்ளது என சற்று நிமிடங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியாவில் 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest