பிரதமரின் அறிவுரைப்படி தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் கைதட்ட அறிவுறுத்தல்!

முதலில் சீனாவில் பரவி வந்த கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதையடுத்து, இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அந்நாட்டு அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவிலும் இந்த நோயானது 250-க்கும் மேற்பட்ட மக்களை தாக்கியுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று மாலை 5 மணியளவில், அனைவரும் கரவோசை எழுப்பி மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் காவலர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி, தேமுதிக தலைவரான விஜயகாந்த், தேமுதிக தொண்டர்களுக்கு கைதட்டுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.