புதுக்கோட்டையில் இணையத்தில் வதந்தியான செய்திகளை பரப்பிய இருவர் கைது!

கடந்த சில மாதங்களாக சீனாவில் பரவி வந்த உயிர்கொல்லி வைரஸான கொரோனா, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இது சீனாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா குறித்து வதந்தியாக செய்திகள் பரவி வருகிற நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், தன்னுடன் பழகும் சக நண்பருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக வாட்சப்பில் செய்தி பரப்பி வந்த, ஐயப்பன், ராஜ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதே சம்பவம் பூந்தமல்லியில் நடைபெற்று அங்கும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025