பிரதமர் நரேந்திர மோடி வேதனை?பத்ம விருதுகளை பெற இவர்களுக்கு மட்டும்தான் தகுதியா?
பிரதமர் நரேந்திர மோடி பத்ம விருதுகளை பெற டெல்லிவாசிகள் மட்டுமே தகுதி படைத்தவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் (Central Information Commission) புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பத்ம விருதுகள் குறித்து பேசினார். நாட்டின் விடுதலைக்கு பிறகு பெரும்பாலான பத்ம விருதுகள் டெல்லியைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வாங்கியுள்ளனர் என கருதுவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, அவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகளின் உடல் நலத்தைப் பேணும் மருத்துவர்கள் என தெரிவித்துள்ளார். டெல்லியில் வசிப்பவர்கள் மட்டும்தான் பத்ம விருதுகளுக்கு தகுதி படைத்தவர்களா? என கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, நாட்டில் வேறு எங்குமே திறமையானவர்கள் இல்லையா என்றும் கேட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.