Breaking: நீட் தேர்வு .! அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை.! முதலமைச்சர் பழனிசாமி .
1 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் செய்ய தமிழக அரசு ஒரு முடிவை எடுத்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரையில் முதலமைச்சர் , அனைத்து அரசு நகராட்சி , மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்காக இந்த சட்டம் என்பது உருவாக்கப்பட்டதாகவும் , நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்த சட்டம் வழிவகை செய்யும் அதற்க்கான முடிவினை அரசு எடுத்துள்ளதாக கூறினார்.
நீட் தேர்வில் தமிழக அரசு மாணவர்களின் தேர்ச்சி குறைந்தது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அந்த ஆணையம் இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறினார்.
அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுடைய மருத்துவ கல்லூரியில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் இந்த நடவடிக்கை என கூறினார்.
.