வெடி விபத்து.! உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் பழனிசாமி அறிவிப்பு.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறை கிராமத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று 30 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மருந்துகளில் ஏற்பட்ட உராய்வைத் தொடர்ந்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தென்காசி அருகே மைப்பாறையைச் சேர்ந்த ராணி , ஜெயபாரதி , பத்ரகாளி , வேலுத்தாய், தாமரைச்செல்வி உள்ளிட்ட 9 பேர் உடல் கருகி இறந்தனர்.
படுகாயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 8 பேர் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என சட்டப்பேரவையில்முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025