முதலமைச்சர் பழனிசாமியை பாராட்டிய மோடி.!
பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று தமிழத்தில் உள்ள அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார் . மேலும் நாளை சுய ஊரடங்கை முன்னிட்டு தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்து இயங்காது , மெட்ரோ ரயில் ஓடாது எனவும் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக முதலமைச்சரிடம் பேசி உள்ளார். அப்போது தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் , தமிழகத்தின் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமியை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்கம் , பெரிய மால்கள் , சுற்றுலா தலங்கள் ஆகியவை வருகின்ற 31-ம் தேதி வரை மூட உத்தரவு விடப்பட்டுள்ளது.