கொரோனா பாதிப்பு! சாலையோர மக்களுக்கு தாங்கும் இடம்!
கடந்த சில மாதங்களாக சீனாவில் பரவி வந்த உயிர்கொல்லி வைரஸான கொரோனா, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இது சீனாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், அனைத்து நாடுகளிலும் அந்நாட்டு மக்களை கொரோனா பாதிப்பில் இருந்து விடுதலை பெற பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்திய அரசும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிற நிலையில், சென்னையில், 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் சாலையோரங்களில் வசித்து வருகிற நிலையில், மக்களை சமூக நலக்கூடங்களில் தங்க அனுமதித்து, உணவு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.