சிறு, குறு நிறுவனங்கள் கடன் செலுத்த கூடுதல் அவகாசம்..?
இந்தியாவில் கொரோனா வைரசால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கொரோனா பாதித்துவிடும் என்ற எண்ணத்தில் வீடுகளில் இருந்து வருகின்றார்.இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நடைபெறும் உற்பத்திகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடுதல் அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. அதில் உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு வெளிநாட்டவர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 64 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.