இதுதான் எங்களின் கடைசி ஆசை.. எப்படியாவது நிறைவேற்றிவிடுங்கள்.! கடைசி நிமிடத்தில் நடந்த சோகம்.!
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த சம்பவத்தால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். குற்றவாளிகள் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகிய 4 பேருக்கும் குற்றச் சம்பவம் நடைபெற்று 8 வருடங்கள் கழிந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒரே நேரத்தில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை பவன் ஜல்லாத் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இதுகுறித்து சிறையிலுள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், தான் தூக்கிலிடப்போகும் செய்தியை கேட்டதும் 4 பேரும் கவலை மற்றும் பயத்தால் துடிதுடித்து வந்தனர். மேலும், மாலை நேரத்தில் அவர்கள் வழக்கமாக அருந்தும் தேனீர் கூட அருந்தவில்லை என்றும் கைதிகள் அனைவரும் பயத்தில் இருந்ததாகவும், குற்றவாளிகள் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டாதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவர்களின் கடைசி ஆசை என்னவென்று கேட்டனர். அதற்க்கு முகேஷ், நான் மரணமடைந்த பின் எனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கிவிடுங்கள் என்றும் தான் வரைந்த அனைத்து ஓவியங்களையும் சிறை கண்காணிப்பாளருக்கு வழங்க விரும்புவதாக வினய் சர்மா கூறினார். அதில் “ஹனுமான் சாலிசா” எனும் ஓவியத்தை தன்னுடைய குடும்பத்தினருக்கு வழங்குமாறு கூறி வந்ததாக சிறை கண்காணிப்பாளர் கூறினார்.