தாய்லாந்தில் நோயாளிகளைப் பராமரிக்கக்கும் நிஞ்சா ரோபோக்கள் .!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் தினமும் பலரின் உயிரை பறித்து வருகிறது.
கொரோனா வைரசால் சீனாவிற்கு பிறகு இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தாய்லாந்தில் கொரோனா வைரசால்200-க்கும்மேற்பட்டோர் பாதித்துள்ளனர். மேலும் ஒருவர் இறந்துள்ளார்.கொரோனா வைரஸ் தாய்லாந்தில் பரவாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தாய்லாந்தில் கொரோனா வைரஸ் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிக்சை பெற்று வருகின்றனர்.அவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளா்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களின் வேலைசுமை குறைக்க தாய்லாந்து மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைப் பராமரிக்க தாய்லாந்து அரசு “நிஞ்சா ரோபோ”க்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம், சுகாதாரப் பணியாளா்களின் வேலைசுமை குறையும் மேலும் அவா்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.