20 ஆயிரம் கோடியை விடுவித்தார் கேரள முதல்வர்!கேளிக்கை வரி தள்ளுபடி..ஹெலிகாப்டர் சேவை..அதிரடி அறிவிப்புகள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணாமாக, வணிகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அன்றாட தினக்கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்துவர்களின் வருமானமும் முடங்கியுள்ளது.
இந்நிலையில் தான் மக்களுக்கு பொருளாதார உதவிகளை செய்ய அரசுக்கு மக்கள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக கேரளாவில் ₹20 ஆயிரம் கோடியை ஒதுக்கி முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பொது மக்களின் மருத்துவத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கி உத்திரபிறப்பித்துள்ளார்.
மேலும் தனது உத்தரவில் கடன்கள் வழங்கவும், இலவச ரேஷன் பொருட்களுக்கும் “2ஆயிரம் கோடி” ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு “1320 கோடியும்”, அந்த ஓய்வூதியம் வாங்காதவர்களுகு “தலா ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு 100 கோடி ரூபாய் நிதியும்” ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் “மின் கட்டணம், குடிநீர் கட்டண”த்தை செலுத்த கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர் மூடப்படுள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு “கேளிக்கை வரி தள்ளுபடி” செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் திறக்கப்படும் மலிவு விலை உணவகத்தில் “20 ரூபாய்”க்கு உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் அவசர காலத்தில் மக்களுக்கு தேவைப்படும் மருந்துகள், உணவுகளை எடுத்துச் செல்லவும், பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்யவும் ஹெலிகாப்டர் சேவை வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.