ஹெச்.ராஜா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இதனிடையே காரைக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10ஆவது வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் இருவர் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை குறித்த சர்ச்சையையடுத்து, அவரது வீட்டில் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய உள்ளூர் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.