இந்தியாவில் 40 வருடங்களுக்கு பிறகு 4 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றம்.!
நிர்பயா குற்றவாளிகள் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகிய 4 பேருக்கும் ஒரே நேரத்தில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை பவன் ஜல்லாத் நிறைவேற்றினார். அடுத்தடுத்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியான நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2012 டிசம்பரில் நடைபெற்ற சம்பவம் 2020 மார்ச் மாதம் 20ம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
4 பேரும் ஒரே நேரத்தில் தூக்கில் போடுவது இந்தியாவில் இது 2வது முறையாகும். கடந்த 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் ஜோஷி அபாயகார் தொடர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர். அபினவ் கலா மகாவித்தியாலவை சேர்ந்த மாணவர்கள் ராஜேந்திர ஜக்கால், திலீப் சுடர், சாந்தாராம் ஜக்தாப் ஆகியோரும், அவர்களது நண்பரான முனாவர் ஷாவும் 1976ம் ஆண்டு ஜனவரி முதல் 1977ம் ஆண்டு மார்ச் வரை தொடர் கொலைகளில் ஈடுபட்டனர்.
புனேவை சேர்ந்த அச்யுத் ஜோஷி என்பவற்றின் குடும்பத்தினர் 3 பேரை கொலை செய்துவிட்டு, அவர்கள் வீட்டிலிருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை 4 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்கப்பட்டனர். பின்னர் சம்ஸ்கிருத அறிஞர் சாஸ்திரி அபாயகரின் குடும்பத்தினர் 5 பேரையும் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருக்கும் விலை மதிப்புமிக்க பொருட்களை திருடி சென்றனர். மேலும் 3 பேரை அந்த 4 பேர் கொலை செய்துள்ளனர். இதனால் இது ஜோஷி அபயங்கர் தொடர் கொலை வழக்கு என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் இந்த கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை கைது செய்ய புனே காவல்துறை ஒரு வருடமாக முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து கொலை தொடர்பான விசாரணையில், கொலை செய்யப்பட்ட அனைவரும் நைலான் கயிற்றின் மூலம் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்டது என தெரியவந்தது. புனேவில் மேலும் கொலைகள் நடைபெறாமல் இருக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான 4 பேரும் அடிக்கடி வெளி நகரங்களுக்கு சென்று வந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் போலீஸ் விசாரணையில் 4 பேரும் வெவ்வேறு விதமாக பதில்களை சொன்னைதையடுத்து அவர்களது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் 10 பேரை கொலைசெய்தது அவர்கள் தான் என்று தெரியவந்தது.
இதையடுத்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த புனேவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 1978ம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர் அவர்களின் தண்டனையை 1979ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனிடையே 1980ம் ஆண்டு அந்த 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைதொடர்ந்து கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்ததை அடுத்து ஏர்வாடா சிறையில் அவர்கள் 4 பேருக்கும் ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.