#BREAKING: ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அபராதம் கிடையாது.!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 141 இந்தியர்கள், 25 வெளிநாட்டினர்கள் என மொத்தம் இதுவரை 169 ஆக உயர்ந்துள்ளது.
ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அதற்கான அபராத தொகை வசூலிக்கப்படாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனாவால் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 100 சதவீத பணமும் திருப்பித் தரப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனாவால் பலரும் டிக்கெட்டை ரத்து செய்து வரும் நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. ரயிலின் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்தால் முன்புரூ.60 முதல் வசூலிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன் விமான டிக்கெட் ரத்து செய்தால் முழு பணத்தையும் திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காரணமாக ரயில் பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றன. மார்ச் மாதத்தில் நேற்றுவரை 60% ரயில் டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்துள்ளதாக நேற்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் கூறினார்கள். இதனால் நாடு முழுவதும் நாளை முதல் மார்ச் 31-ம் தேி வரை 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025