இந்த வெற்றியை கொடுத்த ஈசனுக்கும், உங்களுக்கும் நன்றி – இயக்குனர் மோகன்
இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி. இப்படம் பல தடைகளை தாண்டி, ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நாடக காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
இந்நிலையில், இப்படம் இதுவரை 14.28 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், இப்படம் கொரோனா எதிரொலியால் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. இதுகுறித்து இயக்குனர் மோகன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்த வெற்றியை கொடுத்த ஈசனுக்கும், உங்களுக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.