சர்வதேச மகிழ்ச்சி தினம்.! வாய்விட்டு சிரிப்போம் நோயை விரட்டி அடிப்போம்.!

Default Image

ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.

 சர்வதேச மகிழ்ச்சி தினம் என தனியாக ஒரு நாள் கொண்டாட வேண்டுமா..? என பலருடைய மனதில் தோன்றும்.”மகிழ்ச்சி” என்ற வார்த்தையுடைய அர்த்தம் தெரியாதவர்களும் , அதை அதிகம் அனுபவிக்கதர்களும் மத்தியில் தான் இந்த கேள்வி எழும்.

 

தற்போது உள்ள பலர் கூறுவது, என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது காலநிலை போல அவ்வப்போது வந்து செல்கிறது. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் நிரந்தமாக இல்லை என கூறுகின்றனர்.இதற்கு காரணம்  என்னவென்று அவர்களிடம் கேட்டால் பலர் கூறும் கருத்து என் வாழ்க்கையில் பணம் என்பது இல்லை என கூறுகிறார்கள். 

ஆனால் நம்மில் பலரிடம் பணம் இருந்தாலும் கவலை, பணம் இல்லையென்றாலும் கவலைப்படுகின்றனர். எனவே நம் மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பதற்கு காரணம் ஏதோ ஒரு விஷயத்தை நம் நினைத்து கொண்ட அதை பற்றி யோசித்து கொண்டே நம்முடைய மகிழ்ச்சியை இழக்கின்றோம்.

நமக்கு ஒரு கஷ்டம் என்றால் எத்தனை பேர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்..? பெரும்பாலானோர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதே இல்லை இது தான் நம் மகிழ்ச்சியை இழப்பதற்கான முக்கிய காரணம்.

எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் குடும்ப தலைவன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றால் அதற்க்கு முக்கிய காரணம் அவர்களின் குழந்தை தான். ஏன் தெரியுமா..? குழந்தைகளுடன் நம் அதிக நேரம் செலவு செய்யும்போது அவர்களின் கள்ளகபடம் இல்லாத தன்மை நம்மிடம் ஒட்டி கொள்ளும்.

ஆனால் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்யாத குடும்ப தலைவன் வாழ்க்கையில் எவ்வளவு தான் பணம் இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.முடிந்தவரை நாம் சிரிக்கவில்லை என்றாலும் மற்றவர்களை சிரிக்கவையுங்கள் நாம் வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளோம் அதற்கு ஏற்றார் போல நம் ஆயுள் அதிகரிக்கும்.

அதற்காக தான் மருத்துவர்கள் தினமும் நமக்கு ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் ரேடியோவில் நமக்கு பிடித்த பாடல்களின்  சத்தத்தை சற்று அதிகரித்து அந்த பாடலுடன் சேர்ந்து பாடுங்கள் என்கிறார்கள்.  அப்படி ஓய்வு கிடைக்கவில்லை என்றால் வீட்டில் குளிக்கும் போதாவது பாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்