நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன் – முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் பேச்சு.!

Default Image

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை விவாதத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன் என்றும் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். தமிழகத்தை நீர் மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம் என்று குறிப்பிட்டு, தருமபுரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.486 கோடி செலவில் நீரேற்று பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார். 

மேலும் 15 மாவட்டங்களில் 40 இடங்களில் உள்ள பாசனக் கட்டுமானங்களை பழுதுபார்த்தல், நவீனப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் ரூ.834 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் எனவும் 109 கிலோமீட்டர் நீள மாநில நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலைகள், உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1,500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்று கூறினார். இதையடுத்து மாவட்டங்களில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 54 ஆற்று பாலங்கள் ரூ.310 கோடி மதிப்பில் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

இதையடுத்து சாலை பாதுகாப்பு பணிகள் ரூ.400 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தரமணி முதல் சிறுசேரி வரையிலான பிரதான சாலை சந்திப்பபுகளான, தரமணி சாலை சந்திப்பு, பெருங்குடி எம் ஜி ஆர் சாலை சந்திப்பு, துரைப்பாக்கம் சாலை சந்திப்பு சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு சிறுசேரி சாலை சந்திப்பு ஆகிய 5 இடங்களில் ரூ.500 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்